குடியை
தேடி சென்றான்...
இன்று
குடிலை மறந்து தெருவில் கிடந்தான்!
பாசமிகு பிள்ளையையும்...
நேசமிகு துணைவியையும்...
வெறுத்தான்! வதைத்தான்!!
பாட்டில் சாராயமும்,
பாக்கெட் ஊறுகாயும்,
தன் உயிர் என மயங்கினான்!
உன் உயிரை,
மது மெல்ல குடிக்கிறது...
என்பதை
தெரிந்தே குடிக்கிறான்!
இதை விட்டு விட்டு,
உன் குடும்பத்தை நேசித்துபார்,
அது
தரும் போதை,
உனக்கு மட்டும் அல்ல...
உன் குடும்பத்திற்கும் நிம்மதி தேடி தரும்!!
குடியை மறப்போம்!! குடும்பத்தை காப்போம்!!!
- பா.பார்த்திபன்